பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டு நகை கொள்ளையில் ரஜினி மகளின் கார் ஓட்டுநருக்கு தொடர்பா?

Date:

சென்னை அபிராமபுரம், 3வது தெருவில் உள்ள வீட்டில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டு லாக்கரிலிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருட்டுப் போனது.இதுகுறித்து, தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டிலிருந்து 200 பவுன் நகை வரை திருட்டுப் போனது. இது தொடர்பாக வீட்டு வேலை செய்து வந்த ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்ட வெங்கடேசன் முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டிலும் வேலை செய்து வந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

எனவே, அவருக்கு இந்த திருட்டு வழக்குகளிலும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் தற்போது அபிராமபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை செய்த 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்