எரிவாயுவின் விலையை குறைந்தாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலையை குறைத்தால் மாத்திரமே பாணின் விலையை குறைக்க முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15.00 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், இறுதியாக பாணின் விலை 10.00 ரூபாவினால் குறைக்கப்பட்டது.



