ஐசிசி ரி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் கப்டன் ரஷித் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற வரலாற்று வெற்றியை பெற்றது. இதில் ரஷித் கான் முக்கிய வங்காற்றினார்.
ரஷித் 2018 பெப்ரவரியில் முதல் முறையாக தரவரிசையில் முதலிடத்தை எட்டினார், மீண்டும் கடந்த ஆண்டு நவம்பரில் முதலிடத்தைப் பிடித்தார்.
ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சிறந்த பெறுபேறு இது. முஜீப் உர் ரஹ்மான் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தில் உள்ளார். புதிய தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் மூன்று பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
துடுப்பாட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் சடுதியாக முன்னேறியுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 204.76 ஸ்டிரைக் ரேட்டில் 172 ரன்களை எடுத்து ஹென்ட்ரிக்ஸ், எட்டு இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்தார். மறுபுறம், ரோசோவ் இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு முன்னேறினார்.
மேற்கிந்தியத்தீவுகளின் ஜோன்சன் சார்லஸ் சமீப காலங்களில் தர வரிசையில் மிகப்பெரிய தாவல்களில் ஒன்றை செய்தார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் 46 பந்துகளில் 118 ரன்கள் விளாசியதை தொடர்ந்து, 92 இடங்கள் முன்னேறி 17 வது இடத்திற்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையிலும் மாறுதல் ஏற்பட்டது. அவுஸ்திரேலியாவின் லெக்-ஸ்பின்னர் அடம் ஸம்பா, சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேறினார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் அவரது வங்கதேச அணி முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது.