இரண்டு கைகளையும் வெட்டி பார்சல் செய்துகொண்டு சென்ற பயங்கரம்: கள்ளக்காதல் தகராறே காரணம்!

Date:

மொரட்டுவை தெல்கஹவத்த சந்தியில் ஒருவரின் இரண்டு கைகளும் வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கள்ளக்காதல் விவகாரமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மின் பழுதுபார்க்கும் தொழில்புரியும் ஒருவரின் இரண்டு கைகளையும் வெட்டியெடுத்துக் கொண்டு தலைமறைவானவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

படுகாயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கொரலவெல்ல பிரதேசத்தில் வசிப்பவர்.

அவரை துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் நபர் வாளால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது கைகளால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றார், ஆனால் தாக்குதல் நடத்தியவர் வாளால் வெட்டி மணிக்கட்டுடன் கைகளை துண்டித்துவிட்டார்.

கைகள் இரண்டும் கீழே விழுந்த பின்னர், தாக்குதல் நடத்திய நபர் தனது சட்டையை கழற்றி, தரையில் விழுந்த கைகளை எடுத்து, மேற்சட்டையால் பொதியாக கட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரின் மனைவியுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் சந்தேகநபரை வழிமறித்து, தடியால் தாக்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்