மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தில் பிரதான வீதியில் வைத்து ஒருவரின் கைகளை கூரிய ஆயுதத்தால் வெட்டு, எடுத்துச் சென்ற பயங்கரக் காட்சி அருகில் உள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் இரண்டு கைகளுமே வெட்டப்பட்டுள்ளன.
உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் மொரட்டுவ பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலாளி துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் தன்னை தாக்கிய சந்தேக நபர் குறித்து தகவல் அளித்ததாகவும், சம்பவம் நடந்த உடனேயே அவர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மின்சார உபகரணங்கள் பழுதுபார்ப்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கைகளும் முழங்கைக்கு கீழே துண்டிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எடுக்கப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துண்டிக்கப்பட்ட பாகங்கள் இருந்திருந்தால், அவற்றை மாற்றியமைக்கும் சாத்தியம் இருந்திருக்கும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினருக்கும் இடையில் முன்விரோதம் காரணமாக பாதிக்கப்பட்டவரின் கைகள் முழங்கையுடன் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.




