மார்ச் 22 உலக நீர்தினத்தை முன்னிட்டு கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முல்லைதீவு நகர கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு ஒன்று இன்று (22)காலை முன்னெடுக்கப்படுள்ளது.
இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் பல்வேறுபட்ட சூழல் நேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக நீர்தினமான இன்று நீரின் அவசியத்தை வலியுறுத்தியும் சூழலை தூய்மையாக பேணும் வகையிலும் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படுள்ளது .
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.





