புஷ்பா 2 – பெங்களூருவில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் காட்சிகள் படப்பிடிப்பு

Date:

‘புஷ்பா: தி ரூல்’படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் முக்கியமான காட்சிகள் பெங்களூருவில் படமாக்கப்பபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். முதல் பாகம் வெற்றிப்பெற்ற அடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிறிய இடைவெளிக்குப்பின் இப்படத்தின் முக்கியமான காட்சிகள் விரைவில் பெங்களூருவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் அல்லு அர்ஜுனும், ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கெனவே, ஃபஹத் ஃபாசில் படப்பிடிப்பு ஒன்றிற்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வருகிற ஏப்ரல் 8ஆம் திகதி அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த 3 நிமிட கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் எனவும் தகவல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் ஒப்பந்தங்களை மீறியதால் 30 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது– கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தங்களது ஒப்பந்தங்கள் மற்றும் பிணைப்பத்திரங்களை மீறியதற்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்