கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு இரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பல ரஷ்யாவின் கலிபர் cruise ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இராணுவ ஏஜென்சி திங்களன்று தாமதமாக பல கலிபர் குருஸ் ஏவுகணைகள் வெடிப்பால் அழிக்கப்பட்டதாகக் கூறியது, வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் அல்லது சக்திவாய்ந்த ஏவுகணைகள் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை.
“தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் வடக்கே உள்ள ஜான்கோய் நகரில் ரஷ்ய கலிப்ர்-கேஎன் குருஸ் ஏவுகணைகள் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது அவை அழிக்கப்பட்டன” என்று உக்ரைனின் உளவுத்துறை சமூக ஊடக இடுகைகளில் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் ரஷ்ய கருங்கடல் கடற்படையால் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுவதற்கு கொண்டு செல்லப்பட்டவை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜான்கோய் நிர்வாகத்தின் ரஷ்ய-நிறுவப்பட்ட தலைவரான Ihor Ivin, நகரம் ட்ரோன்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், 33 வயதான ஒரு நபர் கீழே விழுந்த ட்ரோனின் சிதைவால் காயத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வீடு, பள்ளி மற்றும் மளிகைக் கடை தீப்பிடித்தது, மேலும் இந்த தாக்குதலில் மின் கட்டமும் சேதம் அடைந்தது, ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான TASS உள்ளூர் Krym-24 தொலைக்காட்சி சேனலில் Ivin கூறியதை மேற்கோள் காட்டியது.
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் கவர்னர் செர்ஜி அக்செனோவ், உக்ரைனின் உளவுத்துறை ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகக் கூறிய ஜான்கோய்க்கு அருகில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் சுடப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தார். விழுந்து கிடக்கும் இடிபாடுகள் ஒருவரை காயப்படுத்தியதுடன் வீடு மற்றும் ஒரு கடையையும் சேதப்படுத்தியது என்று அக்ஸெனோவ் கூறினார்.
இந்த தாக்குதலில் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஜான்கோய் வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் ட்ரோன் இயந்திரங்களின் சத்தம் கேட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் கலிப்ர் குரூஸ் ஏவுகணைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
Sounds of the drones that hit Dzhankoy in occupied Crimea are similar to those of the Iranian Shahed-136/131 drones.
Some sources speculate that Shaheds were retargeted to Crimea-based targets. More likely, Ukraine has developed drones with similar engines.
📹via @RoksolanaKrim pic.twitter.com/djmDckWpKz— Euromaidan Press (@EuromaidanPress) March 20, 2023
கிரிமியாவில் ரஷ்ய இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் பிற இலக்குகள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் போர் முழுவதும் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், உக்ரைன் அரிதாகவே, எப்போதாவது, அத்தகைய தாக்குதல்களுக்கு வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது, ஆனால் அவற்றின் விளைவுகளை வரவேற்கிறது.