யாழில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு: ஒன்று மீட்பு!

Date:

கடந்த 2 நாட்ளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம் ,அச்சுவேலி கோப்பாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கிற்கும் மேற்பட்ட நூதனமான மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணபொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிமார் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது

எனினும் இன்றைய தினம் சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் லவ்வர்ஸ் ஒழுங்கை பகுதியில் இலக்கத் தகடு அற்றநிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தப்பி ஓடியுள்ளார்.

நேற்றிரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்து செல்வதை அவதானித்த சுன்னாக பொலிசார். அவரை பின்தொடர்ந்து சென்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பொலிசார் மோட்டார் சைக்கிளை போலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றநிலையில்,  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று காலை சுன்னாக பொலிசில் தனது மோட்டார் சைக்கிள் என உறுதிப்படுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட வுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணக்குடா நாட்டில் நான்கு திருட்டு சம்பவங்கள் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்