கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் இறுதிநாள் அமர்வு இன்று இடம்பெற்ற
போது கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
நடாத்தியுள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக கரைச்சி பிரதேச சபையின் நிர்வாகத்தில் தான் உட்பட
பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களு்ககு அநீதி
இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கடந்த காலங்களிலும் தான் தனியொரு
நபராக கரைச்சி பிரதேச சபையின் அநீதிகளுக்கு எதிராக போராடியிருப்பதாகவும்
தெரிவித்த அவர்
இன்றும் தனக்கான நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பிரான்சின் துயரம்
சாய்ந்த கோபுரம், சீனாவின் துயரம் குவாங்கோ நதி, இந்தியாவின் துயரம்
கூவம் ஆறு, கிளிநொச்சியின் துயரம் கரைச்சி பிரதேச சபை, ஜேர்மனியின் கொடூர
ஆட்சியாளன் கிட்லர், உகண்டாவின் கொடூர ஆட்சியாளன் இடியமீன், கிளிநொச்சி
பிரதேச சபையின் கொடூர ஆட்சியாளன் வேழமாலிகிதன் என எழுதப்பட்ட பதாதை
ஒன்றையும் துவிச்சக்கர வண்டியில் கட்டியவாறு கரைச்சி பிரதேச சபையின்
முற்றத்தில் தனது எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.





