‘தலைவர் இருக்கிறார் என சொல்லுமாறு என்னிடமும் கேட்டார்கள்’: சீமான் தகவல்!

Date:

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சொல்லுமாறு தன்னிடமும் கேட்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஊடக கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏதோ ஒரு வேலை நம்மை சுற்றி நடக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் நமது மக்கள் பெரு மகிழ்ச்சியடைவார்கள். அவர் வரட்டும். வந்த பின் கொண்டாடுவோம்.

தலைவர் சினிமா பாணியில் பேசிவிட்டு வருபவர் அல்ல. லேட்டா வந்தாலும் லேட்டசாக வருவேன் என்பதை போல பேசிவிட்டு வருபவர் அல்ல. அவர் 15 வருடங்களாக ஒளிந்திருப்பவர் அல்ல. அவர் ஒளிந்திருக்கிறார் என சொல்வது அவரை அவமதிப்பது.

தலைவர் இருக்கிறார் என சொல்லுமாறு என்னிடமும் கேட்டார்கள். மாவீரர்தினத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதை கேட்டார்கள். தலைவரை என்னிடம் பேசுமாறு சொல்லிவிட்டேன்.

தலைவர் இருக்கிறார் என சொல்வதை நான் நம்பவில்லை. நெடுமாறன் சொன்ன விடயத்தை பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.

தலைவர் இருக்கிறார் என சொல்வது ஈழத்தமிழர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாகும் அறிவிப்பு.

அவர் வெளிநாட்டில் ஒளிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒளிந்திருந்தால் கண்டுபிடித்திருப்பார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்