25 வருடங்களாக ஊதியமின்றி வீட்டு வேலை செய்த மனைவிக்கு சம்பளம் வழங்குமாறு கணவனுக்கு உத்தரவு!

Date:

25 வருடங்களாக ஊதியமின்றி வீட்டுப்பணியை கவனித்து வந்த மனைவிக்கு, அந்த காலகட்டத்திற்குரிய குறைந்தபட்ச ஊதியமாக கணக்கிட்ட 6.9 கோடி ரூபாவை வழங்குமாறு கணவனிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினில் இந்த சம்பவம் நடந்தது.

இரு குழந்தைகளுக்கு தாயான இவானா மாரல் என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலையையும் பார்க்கச் செய்து, அவரது உடற்பயிற்சி கூடத்தையும் கவனிக்கச் செய்ய சொல்கிறார் என வழக்குத் தொடர்ந்து விவாகரத்து பெற்றதோடு, ஜீவனாம்சமும் பெற்றிருக்கிறார்.

1995ம் ஆண்டு இவானாவின் திருமணம் நடந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விவாகரத்தோடு அது முடிந்திருக்கிறது. இவானாவின் 25 ஆண்டுகால திருமண இல்வாழ்க்கையில் முழுக்க முழுக்க அவரது இரு பெண் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டும், வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக செய்தும் வந்திருக்கிறார்.

அந்த சமயங்களில் கணவர் எந்த வகையிலும் உறுதுணையாக இல்லாத காரணத்தால் மனம் நொந்துப்போன இவானா விவாகரத்து செய்திருக்கிறார். இந்த விவாகரத்து வழக்கு தெற்கு ஸ்பெயினில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதற்கான தீர்ப்பில், “இத்தனை ஆண்டுகளாக ஊதியமே இல்லாமல் வீட்டு வேலைகளை பார்க்கச் செய்ய வைத்தது முழுக்க முழுக்க கொடுமையானது. இதனால் 25 ஆண்டுகளுக்கான ஆண்டு ஊதியமாக கணக்கிட்டு இவானாவுக்கு 200,000 பவுண்ஸ் (இலங்கை மதிப்பில் ரூ.6.9 கோடி) அவர்களது இரு பிள்ளைகளுக்கு  மாதாமாதம் உதவித் தொகை கொடுக்க வேண்டும்” என இவானாவின் முன்னாள் கணவரும் தொழிலதிபருமானவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்