ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதான கோதுமை மா நிறுவனமான பிரிமா நிறுவனம், நாட்டிலுள்ள அனைத்து பிரிமா கோதுமை மா விற்பனையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
டொலரின் விலை குறைவினால் பிரிமா நிறுவனம் விற்பனை செய்யும் ஒவ்வொரு கிலோ கோதுமை மாவின் விலையும் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விற்பனை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.




