பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு: பிரதேச செயலகத்தின் தலையீட்டால் நிறுத்தம்

Date:

வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்க புரத்தில் உள்ள பாலர் பாடசாலையில் ஒன்றில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கிறிஸ்தவ மதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பிரதேச செயலகத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்கபுரத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு முன்பள்ளிச் செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த முன்பள்ளியை மதக் குழு ஒன்று தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக முன் பள்ளியில் மாணவர்கள் குறைவு என்பதை காரணம் காட்டி தமது செயற்பாடுகளை குறித்த முன் பள்ளியில் ஊக்குவிக்க ஆரம்பித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் சிவசேனை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரனால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, பாலர் பாடசாலையை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத செயற்பாட்டுக் குழுவினரை குறித்த முன்பள்ளியின் இருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்