சிறுத்தையின் தாக்குதலில் தொழிலாளியும், நாயும் காயம்!

Date:

நாயை வேட்டையாட வந்த சிறுத்தையொன்று தாக்கியதில் படுகாயமடைந்த ஒருவர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பொகவந்தலாவை, டின்சின் தோட்டத்தில் நேற்று (1) இடம்பெற்றது.

அந்த தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் தேயிலை தோட்டத்துக்கு இரசாயன கலவை தெளித்துக் கொண்டிருந்த தொழிலாளியின் மீதே சிறுத்தை தாக்குதல் நடத்தியது.

காலை 10 மணியளவில் அவருக்கு மிக அண்மையில் நாயொன்று அவலக்குரல் எழுப்பியுள்ளது. அந்த இடத்திற்கு தொழிலாளி சென்றுள்ளார்.

நாயை விட்டுவிட்டு தொழிலாளி மீது சிறுத்தை தாக்கியுள்ளது.

அங்கு பணியிலிருந்த ஏனைய தொழிலாளிகள் சத்தமிட்டதை தொடர்ந்து சிறுத்தை தப்பியோடியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடுமையாக பாதிக்கப்பட்ட நாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தோட்டத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் அடிக்கடி காணாமல் போவதாகவும், சிறுத்தைகளின் நடமாட்டம் இங்கு அதிகமென்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்