கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

Date:

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் திங்கட்கிழமை(27) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (65) என்பவராவார்.

மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்