கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நிமல் அமரசிறி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியை அரசாங்கம் தாக்கியதாகவும், விலைமதிப்பற்ற உயிரிழப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.




