ஆனோல்ட்டிற்கு ஆதரவாக உறுப்பினர்களை அணி திரட்டும் பிரதி முதல்வர் ஈசன்: தமிழ் தேசிய கூட்டமைப்பை காலை வார திறை மறைவு முயற்சி?

Date:

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நாளை (28) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதி முதல்வர் து.ஈசன் வலியுறுத்தி வருவதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ள நிலையில், அந்த கட்சியை சேர்ந்த து.ஈசன், கட்சியின் முடிவிற்கு மாறாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவு திட்ட வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு மாறாக, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளில் து.ஈசன் ஈடுபட்டுள்ளதாக, சில கட்சி உறுப்பினர்கள் தமது தலைமைகளிற்கு முறையிட்டுள்ளனர்.

தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்த தகவலின்படி, குறைந்தது இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நூதனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த இரண்டு உறுப்பினர்கள், து.ஈசன் தெரிவித்த கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறோம் என இரண்டு உறுப்பினர்களிடமும் அவர் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

அப்படி அவர் கூறியிருந்தால் அது தவறான தகவலாகும்.வரவு செலவு திட்ட விவாத்தில் தமிழ்தசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்பதே உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

“ஆனோல்ட் உங்களிடம் வருவார். பார்த்து செய்து விடுங்கள்“ என தன்னிடம் கூறியதாக ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகிறது. ஒரு வாக்குத்தான் சிக்கலாக உள்ளது. நீங்கள் நாளை சபைக்கு வராமல் விட்டு, கொழும்பில் திட்டமிட்ட அலுவலுக்கெ செல்லுங்கள்“ என மற்றொரு உறுப்பினரிடம் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவல்கள் குறித்து வினவுவதற்காக, ஈசனை நேற்று தமிழ்பக்கம் தொடர்பு கொண்ட போதும், அவர் தொலைபேசியில் பதிலளிக்கவில்லை.

இது குறித்து ரெலோ தலைமையிடம் தமிழ் பக்கம் வினவிய போது, வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொள்வதில்லையென்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும், ஈசனின் நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்