யாழில் திருட்டுச் சந்தேகநபர் கைது!

Date:

வட்டுக்கோட்டை பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பகுதியில் தலைமறைவாகி இருந்தார். அவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டவேளை காஸ் சிலிண்டர், உலர் உணவுப் பொருட்கள், தராசு என்பன அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்