ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
“ஜனாதிபதிக்கும் எனக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்கும் எண்ணம் இல்லை. நான் கட்சியை விட்டு வெளியேறும் போது பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை எளிதாக அழைத்துச் சென்றிருக்க முடியும். எவ்வாறாயினும், அவ்வாறு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு அறிவுறுத்தினார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அணி மாறுபவர்களை செய்ய விரும்புவோரை ஏற்றுக்கொள்ளும் தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.




