முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த, தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
தாயின் இரண்டாவது கணவரான 46 வயது ஆசாமி கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி 10 வயதில் பருவமடைந்தது முதல் அவ்வப்போது, தாயின் இரண்டாவது கணவரால் வன்புணரப்பட்டுள்ளார். தாயார் வேலைக்கு சென்று விடுவார். இரவு வேலை செய்யும் இரண்டாவது கணவன், பகலில் வீட்டிலிருந்த போது, மனைவியின் முதல் தாரத்து மகளை வன்புணர்ந்துள்ளார்.
இம்மாதம் இரண்டு முறை வன்புணர்ந்தார். சிறுமியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்த கொடூரத்தை புரிந்துள்ளார்.
இந்த கொடுமையால் அச்சமடைந்திருந்த சிறுமி, என்ன செய்வதென தெரியாமல் அந்தரித்து வந்துள்ளார். இம்மாதம் 17ஆம் திகதி சிறுமியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வன்புணர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒன்றுவிட்ட சகோதரனுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, தனக்கு நடக்கும் கொடுமையை சிறுமி தெரிவித்துள்ளார். இதன்மூலம், சிறுமியின் தாயாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, ஆசாமி கைது செய்யப்பட்டார்.