எதிர் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும் நேற்று (22) இரவு 7 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித்தலைவர் உமா சந்திர பிரகாஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.
இதன் போது ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.