Pagetamil
சினிமா

அஜித்துடன் சவாரி செய்ய ரூ.28 இலட்சத்தில் BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியார்!

மலையாள நடிகை மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில், அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்டார். வட இந்தியாவில் அவர் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர்முறைப்படி இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றார். இப்போது அவர்புதிதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

கொச்சியில் உள்ள ஷோரூம் ஒன்றில் அவர் அதை வாங்கி, ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஒரு நல்ல ரைடர் ஆகும் முன் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதைக் கண்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிக்கும் நடிகர் அஜித்துக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட BMW 1250 GS ஒரு சாகச வகை மோட்டார் சைக்கிளாகும். பல மோட்டார் ஆர்வலர்களால் விரும்பப்படும் ஒன்றாகும். இந்த பைக்கின் விலை 28 இலட்சம் இந்திய ரூபாய்.

அஜித்குமார் இந்த ஆண்டு தனது வழக்கமான குழுவுடன் 60 நாள் பைக் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார். மஞ்சு தனது புதிய பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிளுடன் இந்த சவாரியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment