வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் நகுலேஸ்வர், நகுலாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கும் வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் விநாயகர், வள்ளி, முருகன் தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேசக, ஆராதனைகள் என்பன இடம்பெற்று உள்வீதியுடாக பீடத்தில் வீற்று வந்து வெளி வீதியில் முத்தேர் எறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ் ஆலயத்தின் கொடியேற்றயுற்சவம் கடந்த 10.02.2023 அன்று ஆரம்பமாகி நாளை சமுத்திரத் தீர்த்த உற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும். இவ் கிரியைகளை ஆலய பிரதமகுரு ஸ்ரீ. இராஜராஜக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு கிரியைகளை நடாத்திவைத்தனர்.
மஹாசிவராத்திரி நன்நாளில் பல பகாங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.



