வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பெரும் தொகையை ஏமாற்றிய லுனுகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் உட்பட மூவரை பதுளை மற்றும் லுனுகல நிலையங்களை சேர்ந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளிகளாக காட்டிக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரதி அதிபர் லுணுகல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தையல்காரரும் தோட்டத் தொழிலாளியும் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.
பதுளை, லுணுகல, பசறை, ஹாலிஎல, பண்டாரவளை, மடுல்சிம ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களிடம் இருந்து துபாயில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக எஸ்.எஸ்.பி தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பிரதி அதிபரின் வீட்டுக்குச் சென்று வேலை மோசடி தொடர்பில் அவரைத் தாக்கிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




