கைதான கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டவர்களிற்கு பிணை!

Date:

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சுதந்திரதினத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என 18 பேரும், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்கு பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அங்கு விசேட அதிரப்படையினர், கலகமடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததுடன், போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், நீதிமன்ற உத்தரவில் போராட்டத்திற்னு தடைவிதிக்கப்பட்டிருக்காததை சுட்டிக்காட்டிய முன்னணியினர், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பொலிசார் அடாத்தாக செயற்பட்டு போராட்டக்காரர்களை கைது செய்தனர். போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பின ர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று போராட்டங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் யாழ் நகரெங்கும் படையினர் குவிக்கப்பட்டு, நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்டவர்களை பார்வையிட்டார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினமே நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவதாக பொலிஸாரால் ஆணைக்குழுவுக்கு தெவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் நீதிபதி நளினி சுபாஸ்கரனின் இல்லத்தில் கைதானவர்கள் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 3 இலட்ச் ரூபா சரீரபிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பெப்ரவரி 22ஆம் திகதி வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்