விபத்தில் தந்தையும், மகளும் பலி

Date:

கட்டுகஸ்தோட்டை நாயலதென்னையில் இருந்து ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த வாகனத்தின் பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்ட விபத்தில் 14 வயதுடைய மகளும் 47 வயதுடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹாபிட்டியவில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றுவிட்டு கம்பளை பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி தனது தந்தையுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

பொல்கொல்ல பல்லேகுன்னபன பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான ரோஹன ஜயந்த (47) மற்றும் அவரது இளைய மகள், கடுகஸ்தோட்டை சமுத்திராதேவி மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய மதுஷி மேகலா தனஞ்சனா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் ஒப்பந்தங்களை மீறியதால் 30 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது– கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தங்களது ஒப்பந்தங்கள் மற்றும் பிணைப்பத்திரங்களை மீறியதற்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்