மாணவர் எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் நிறைவடைந்தது!

Date:

இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர்.

இந்த பேரணி திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது. இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர். இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அக்குவான் புயல் தீவிரம் – மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த மேற்கு-மத்திய வங்காள...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் 'ஐஸ்'...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா நாட்டு பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு அம்பிளாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா பிரஜையான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்