தலவாக்கலையில் இருந்து கொட்டகலை பிரதேச சபைத்தலைவரை உருவாக்குவோம்: திலகர்

Date:

தலவாக்கலை மண் ஒரு அரசியல் மண் என்பதை சுதந்திர இலங்கையில் இருந்தே நிரூபித்து வந்துள்ளோம். 1947 ஆம் ஆண்டு தலவாக்கலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவி வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டு அண்ணன் சந்திரசேகரன் தனித்துவமாக போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற வரலாற்று மண் தலவாக்கலை.

இந்த மண்ணில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இளைஞர் பாராளமன்றில் அங்கம் வகித்த இளைஞர் ரமேஷ் அரவிந்தன் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவே வரும் ஆற்றல் கொண்டவர்.

அதற்கு ஒரு முன்னோட்டமாக கொட்டகலை பிரதேசசபை உறுப்பினராக மட்டுமல்ல பிரதேச சபைத் தலைவராகவே அவரை அமரச் செயவதற்கு அரங்கம் ஆவலாக இருக்கிறது. அதற்கு தலவாக்கலை பிரதேச மக்கள் தமது வாக்குகளால் ஆதரவு வழங்க வேண்டூம் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் அதிகாரம் பெற்ற முகவருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு கூம்வுட் வட்டாரத்தில் தராசு போட்டியிடும் ரமேஷ் அரவிந்தன், சிவலிங்கம் தயானி ஆகியோரை ஆதரித்து இணம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் பாராளுமன்ற திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் தோட்டத்தில் சகல சங்கங்களினதும் தோட்டக் கமிட்டி தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் இணைந்து இத்தப் பிரச்சாரக் கூட்டத்தை ஒழிங்கு செய்து இருந்தமை சிற்ப்புக்குரியது. சிவலிங்கம் தயானியின் தந்தை சிறந்த அரசியல் பின்னணி கொண்டவர் என்பது சிறப்பு என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்