துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது.
துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இன்று ஆற்றிய உரையில்-. “எங்கள் குடிமக்களில் 912 பேர் உயிரிழந்தனர், எங்கள் குடிமக்களில் 5385 பேர் காயமடைந்தனர். 2 ஆயிரத்து 470 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். 2 ஆயிரத்து 818 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன” என்று கூறினார். 45 நாடுகள் மற்றும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து உதவிகள் பெறப்பட்டதாக அறிவித்தார்.
“பூகம்பம் ஏற்பட்ட தருணத்திலிருந்து எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எங்கள் ஆளுநர்கள் தங்களின் அனைத்து வழிகளையும் திரட்டியுள்ளனர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களைத் தவிர, அவர்களுடன் பணியாற்ற மேலும் 10 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம். 9 ஆயிரம் பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றனர், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலநடுக்கத்தால் சேதம் விளைவித்த நமது மாகாணங்களில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கீழ் இருக்கும் நமது குடிமக்களுக்கான மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
நமது அமைச்சர்கள் பூகம்ப மண்டலத்தில் உள்ள நமது நகரங்களுக்குச் சென்று பணிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். நாடு முழுவதிலும் இருந்து பூகம்ப மண்டலத்திற்கு தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் அவை அனுப்பப்பட்டு வருகின்றன.
எங்கள் குடிமக்களில் 912 பேர் உயிரிழந்தனர், 5385 எங்கள் குடிமக்கள் காயமடைந்தனர். இடிபாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 470 பேர் மீட்கப்பட்டனர். 2 ஆயிரத்து 818 கட்டிடங்கள் இடிந்தன.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தவிர, 45 நாடுகளில் இருந்து உதவிக்கான சலுகைகள் பெறப்பட்டுள்ளன என்றார்.
சிரியாவின் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் 326 பேர் உயிரிழந்துள்ளனர். 1042 பேர் காயமடைந்தனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 150 பேர் வரை இறந்திருக்கலாமென கருதப்படுகிறது.
சிரிய எல்லையில் இருந்து 40 கிலோமீற்றர் தொலையிலுள்ள தென்மேற்கு துருக்கிய நகரமான காசியான்டெப் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு 500ஐ கடந்தது!
சிரியாவின் வடமேற்கு, துருக்கியின் தெற்கு மாகாணங்களைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 500 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கிய மாகாணங்களில் குறைந்தது 284 பேரும் சிரியாவில் குறைந்தது 230 பேரும் உயிரிழந்தனர்.
சிரியாவில் குறைந்தது 237 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சனா அரச ஊடகம் தெரிவித்தது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பூகம்பத்தால் துருக்கிய சார்பு பிரிவுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதிகளில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதனால் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 245 ஆக உயர்ந்தது.
அஜர்பைஜான் 370 பேர் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவை துருக்கிக்கு அனுப்ப உள்ளதாக அஜர்பைஜான் அவசர சூழ்நிலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு அனுப்பிய செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்திற்குப் பின் “நட்பான” துருக்கிய மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மத்திய துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தெற்கு இத்தாலிக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை இத்தாலிய அதிகாரிகள் தரமிறக்கியுள்ளனர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஒரு அறிக்கையில், “இன்று துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கம் பற்றிய அறிக்கைகளால் அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது” என்று கூறினார்.
“எந்தவொரு மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார், ஜனாதிபதி ஜோ பிடன் USAID மற்றும் பிற கூட்டாட்சி அரசாங்க பங்காளிகளுக்கு “அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்க பதில் விருப்பங்களை மதிப்பீடு செய்ய” உத்தரவிட்டுள்ளார்.
சிரியா, துருக்கியில் உயிரிழப்பு 200ஐ எட்டுகிறது!
துருக்கியின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 440 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிரியாவின், அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 111 பேர் இறந்தனர். 516 பேர் காயமடைந்துள்ளனர்.
திங்களன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 4:17 மணிக்கு (0117 GMT) தாக்கியதாகவும், கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தின் பசார்சிக் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் துருக்கியின் பேரழிவு மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 7 கிலோமீட்டர் (4.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தென்கிழக்கு காசியான்டெப் மாகாணத்தில் 6.4 மற்றும் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கிய மாகாணமான மாலத்யாவில், குறைந்தது 23 பேர் இறந்துள்ளனர். 420 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதன் ஆளுநர் கூறினார். இந்த நிலநடுக்கத்தால் மாகாணத்தில் உள்ள 140 கட்டிடங்களும் இடிந்தன.
Sanliurfa மாகாணத்தில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
Osmaniye மாகாணத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
டியார்பாகிர் மாகாணத்தில் குறைந்தது 6 இறப்புகள் மற்றும் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆரம்ப நிலநடுக்கம் அண்டை நாடுகளான லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டது.
சிரியாவில் குறைந்தது 111 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 516 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு மீட்பு பணிகள் தாதமடைகின்றன. அதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
லெபனானில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: துருக்கி, சிரியாவில் குறைந்தது 26 பேர் பலி; நூற்றுக்கணக்கானவர்கள் புதையுண்டனர்!
சிரிய எல்லைக்கு அருகே தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவிலுள்ள தன்னார்வலர்கள், அங்கு இடிபாடுகளிற்குள் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த பூகம்பத்தின் அதிர்ச்சி வடக்கு சிரியா, சைப்ரஸ் மற்றும் லெபனான் முழுவதும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் சேவை தெரிவித்துள்ளது.
திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு (01:17 GMT) மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 17.9km (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் சேவை தெரிவித்துள்ளது.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) சிரிய எல்லைக்கு அருகில் உள்ள கஹ்ரமன்மராஸ் மற்றும் காஜியான்டெப் நகரங்களுக்கு அருகில் நிலநடுக்கத்தின் அளவு 7.4 ஆக இருந்தது. நடுக்கம் சுமார் ஒரு நிமிடம் நீடித்தது என்றது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு “தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ருவிட்டரில் தெரிவித்தார்.
“இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் மற்றும் குறைந்த சேதத்துடன் கடந்து செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் எழுதினார்.
உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, குறைந்தபட்சம் ஆறு நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அபாயங்கள் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அவர் மக்களை வலியுறுத்தினார்.
இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதே எங்களது முன்னுரிமை என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் துருக்கியின் தென்கிழக்கில் உள்ள பல நகரங்களில் கட்டிடங்கள் இடிபாடுகளாக காணப்பட்டதை காட்டியது.

ஒலிபரப்பாளர்கள் TRT மற்றும் Haberturk கஹ்ரமன்மராஸ் நகரத்தில் அழிக்கப்பட்ட கட்டிடங்களைச் சுற்றி மக்கள் கூடி, உயிர் பிழைத்தவர்களைத் தேடும் படங்களைக் காட்டினர். மற்ற படங்கள் பனி மூடிய சாலைகளின் ஓரத்தில் மக்கள் தங்கள் கார்களில் தஞ்சம் அடைவதைக் காட்டியது.
துருக்கியில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடமேற்கு நகரத்தில் நிலைமையை “பேரழிவு” என்று எதிர்க்கட்சியின் சிரிய சிவில் டிஃபென்ஸ் விவரித்தது, மேலும் கட்டிடங்கள் முழுவதும் இடிந்து விழுந்து, இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர். திறந்த பகுதிகளில் கூடுவதற்கு கட்டிடங்களை காலி செய்யுமாறு சிவில் பாதுகாப்பு மக்களை வலியுறுத்தியது.
அங்கு குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர் என்று சிரியாவின் Atmed இல் உள்ள மருத்துவர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதாக மருத்துவர் முஹீப் கத்தூர் மேலும் தெரிவித்தார்.
“இறப்பு நூற்றுக்கணக்கில் இருப்பதாக நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று அவர் AP இடம் கூறினார்.
துருக்கி உலகின் மிகவும் அதிகமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாகும்.
வடக்கு சிரியாவிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.