யாழ் குடா கடற்பரப்புக்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிக்கிறது!

Date:

யாழ்குடா கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்தவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் உடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்