24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

தளபதி 67 படத்தில் இணைந்தார் நடிகை பிரியா ஆனந்த்

தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

அதன்படி நடிகர் மன்சூர் அலி கான், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்தி நடிகர் சஞ்ஜய் தத், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரியா ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment