இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட், இன்று (1) சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் த.சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ரிசாட் பதியுதீன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொள்வார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1