வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலியை விளக்கமறியலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வசந்த முதலிகே எந்தவொரு சர்வதேச அமைப்பிடமிருந்தோ அல்லது பயங்கரவாத அமைப்பிடமிருந்தோ பணம் பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் 3 குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதால், ஏனைய வழக்குகளிலிருந்து அடுத்த சில நாட்களில் பிணை பெறலாமென வசந்த முதலிகேவின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்