யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் இமானுவல் ஆனல்ட் தலைமையிலான முதலாவது மாநகரசபை அமர்வு இன்று திங்கட்கிழமை நான்கு கட்சிகளின் ஆதரவுடன் இடம்பெற்றது.
யாழ். மாநகர முதல்வராக இமானுவல் ஆனல்ட் உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் முதல்வராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வரின் பதவியேற்பு இலங்கை அரசியலமைப்பு மற்றும் மாநகர கட்டளை சட்டங்களை மீறுவதாகத் தெரிவித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் எதிர்வரும் ஆறாம் திகதி குறித்த வழக்கின் பிரதிவாதிகளை மன்றியல் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் புதிய முதல்வர் தலைமையில் மாநகர அமர்வு இடம்பெறுமா? அல்லது கூட்டம் கோரமின்மையால் நிறுத்தப்படுமா? என்ற சந்தேகங்கள் நிலவிய நிலையில் காலை 10 மணி அளவில் கூட்டம் ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பமான நிலையில் மணி அணி உறுப்பினர்கள் சிலர் முதல்வர் தெரிவு தவறானது தெரிவித்து சபையை நடவடிக்கையில் இருந்து விலகி வெளியேறினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது.




