சாவகச்சேரி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Date:

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் ஏ9 வீதியை கடக்க முயன்ற வர்த்தகர், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கத்தானை பகுதியில் இந்த விபத்து, இன்று (29) மாலை இடம்பெற்றது.

சங்கத்தானையிலுள்ள நகைக்கடை உரிமையாளரான பிரதாப் (38) என்பவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர், சமிக்ஞை செய்தவாறு வீதியின் மறுபக்கம் செல்ல முயன்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வடமராட்சி பகுதி இளைஞன் சிறு காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் உறவினர்கள் அவரை வைத்தியசாலைக்குள் வைத்து தாக்க முயன்றதையடுத்து, வைத்தியசாலையின் பின் பகுதியால் நோயாளர் காவு வண்டி மூலம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்