வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜெனிற்றாவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,
கடந்த 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் முன்னின்று ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார்.
இதற்கு மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம். ஆகவே தொடர்ச்சியாக காணமலாக்கப்பட்டோரின் நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கபடவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1