29.5 C
Jaffna
March 27, 2023
கிழக்கு

மட்டக்களப்பில் அரச வங்கி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த நகைகள் மாயம்!

மட்டக்களப்பில் அரச வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த  20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் காணாமற் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

காதலியின் தாயாரை டிக்டொக்கில் வெருட்டிய 17 வயது காதலன் கைது!

Pagetamil

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

Pagetamil

போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பிக்க வைக்க பொலிசார் மீது தடியடி நடத்திய 4 பெண்கள் கைது!

Pagetamil

பஸ் மோதியதில் பெண் பலி

Pagetamil

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!