பதவி உயர்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது தந்தையின் கைகளினால் பட்டியை அணிவித்து, கௌரவப்படுத்தியுள்ளார்.
தலவாக்கலை கிரேட்வெஸ்ட் தோட்டத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் சதீஷ் என்பவர் பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் பொலிஸ் சார்ஜண்ட் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.
சார்ஜண்ட் பட்டியை தனது தந்தையின் கைகளினால் தனது சீருடையில் அணிவித்துக் கொண்டுள்ளார்.
சிரமத்தின் மத்தியில் தன்னை படிக்க வைத்து, இந்த கௌரவமான நிலைக்கு வர காரணமாக இருந்த தந்தையை கௌரவப்படுத்தவே அவரின் கைகளினால் சார்ஜண்ட் பட்டியை தந்தையின் கைகளினால் அணிந்து கொண்டதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1