பொருளாதார ரீதியாக பின்னடைவினை கண்டுவரும் வடபகுதியில் பெண்களின் தலைமைப்படுத்தும் குடும்பங்களை வலுப்படுத்த வாழ்வாதாரத்தினை ஊக்குவிக்க விஷேட செயற்றிட்ட த்தினை முன்னெடுக்க தொடர்ந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் செல்வி.போனி ஹோர்பாக் தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் 05 பேர் கொண்ட அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்ததுடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடினர்.
இதில் பெண் தலைமைத்தவமான குடும்பங்களின் சமகால நிலைமைகள்,நெதர்லாந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்கள்,யுவதிகளின் தற்கால நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Ms.Bonnie Horbach இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் இலங்கைக்கான வடமாகாண ஒருங்கிணைப்பாளர் எஸ் சந்திரகீர்தனன்,மற்றும் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.