25.5 C
Jaffna
January 29, 2023
தமிழ் சங்கதி

முன்னாள் போராளிகளை சிக்க வைக்கும் இரகசிய நகர்வை தமிழ் அரசு கட்சி ஆரம்பித்துள்ளதா?

தமிழ் தேசிய கூ்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தனின் தந்தையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.தர்மலிங்கத்தின் சிலை திறப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியென குறிப்பிட்டு, நடுத்தர வயதை கடந்த சிலர் நடந்து கொண்ட விதம் பொதுமக்களை அதிருப்தியடைய வைத்தது.

பின்னர் அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

அமரர் வி.தர்மலிங்கத்தின் சிலை நேற்று வலிகாமம் தெற்கு பிரதேசசபை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது. த.சித்தார்த்தன் எம்.பி, தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாண பல்கலைகழக்க துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர், மாலையில் சிறிய கும்பலொன்று அங்கு வந்திறங்கி குழப்பகரமான நடவடிக்கையில் ஈடுபட்டது. தம்மை இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியென குறிப்பிட்ட அந்த நடுத்தர வயதானவர்கள், தர்தலிங்கத்தின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், முதிர்ச்சியடையாத அரசில்வாதிகளை போல குழப்பகரமான கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்த சிலையில், தமிழ் அரசுகட்சியின் பெயர் இருக்கவில்லை, அவரது தந்தையை கொன்ற ஆயுதக்குழுக்களுடன் அவரது மகன் கூட்டு வைத்துள்ளார் என கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய போது, அங்கு வந்த தமிழ் அரசு கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்கள் சரமாரியான கேள்வியெழுப்பி, விசனம் வெளியிட்டனர்.

அவர்கள் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் பெறுமதியானவை. இந்த குழுவின் நடவடிக்கையின் பின்னணியிலிருந்த அரசியல் நோக்கத்தை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்திருந்தது.

தாவடியில் உள்ள தர்மலிங்கத்தின் சிலையில் வருடாவருடம் நினைவு நிகழ்வு நடக்கிறது. இப்போது கொந்தளிக்கும் எத்தனை பேர் அங்கு சென்று அந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு வருகிறீர்கள் என்றனர்.

தர்மலிங்கத்தை கொன்றவருடன் மகன் கூட்டு வைத்துள்ளார் என்கிறீர்கள், அந்த புலனாய்வு அறிக்கை இன்று (நேற்று) தான் உங்கள் கையில் கிடைத்ததா, இதுவரை அனைவரும் கூட்டமைப்பாகத்தானே இயங்கினீர்கள்? அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இயங்க வேண்டுமென்பதுதான் தமிழர்களின் இன்றைய தேவை. உங்கள் தேர்தல் அரசியலை இங்கு வைத்தால் அடித்து விரட்டுவோம் என அங்கு வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மலிங்கத்தை சுட்டவருடன் அவரது மகன் கூட்டு வைத்தது, சம்பந்தமில்லாத உங்களிற்கு வேதனையளிக்கிறது என்கிறீர்கள். தர்மலிங்கத்தை சுட்டது யார் என்பதே தெரியாது என்பததான் யதார்த்தம். ஊகங்களால் முடிவுகளிற்கு வராதீர்கள். ஆனால் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் அமர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றது புலிகள் என்பது உறுதியான வரலாறு. துரோகியென சுட்டுக்கொல்லப்பட்டவரின் கட்சியை சேர்ந்த நீங்கள் துரோகிகளா? புலிகளின் பெயரை சொல்லி அரசியல் செய்து கொண்டு, அமிர்தலிங்கத்தின் நினைவுதினைத்தையும் அனுட்டிக்கும் இரட்டை வேடம் ஏன்?

நாமும் தமிழ் அரசு கட்சிதான் அப்போது துரோகியென தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல எமது தலைவர்களை புலிகள் கொன்றார்கள். புலிகள் எமது கட்சி பிரமுகர்களையே அதிகம் கொன்றனர். அதனால் எமது தலைவர்கள் இலங்கையில் இருக்க முடியாமல் தப்பியோடினர். அதனால் புலிகளை பலமிழக்க செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு எமது கட்சி ஒத்தாசையாக இருந்தது ஆனால் அனைத்து தமிழ் தரப்பும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக தமிழ் அரசு கட்சிக்கும் புலிகள் பொதுமன்னிப்பளித்து, கூட்டமைப்பில் இணைத்தனர். எமது தலைவரை கொன்றவர்களுடன் சேர மாட்டோம் என நாமும் பிழையான முடிவெடுக்காமல் புலிகளின் சொல்படி நடந்தோம்.

இந்த வரலாறுகள் தெரியாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க வந்தவர்களின் கைப்பிள்ளைகளை போல செயற்படும் இந்த தரப்பினர்தான் தமிழ் மக்களிற்கு உண்மையான ஆபத்தானவர்கள் என சுட்டிக்காட்டினர்.

இயக்கங்கள், தமிழ் அரசியல்கட்சிகள் முரண்பட்டு, மோதிக்கொண்டது கடந்தகால வரலாறு. அது தவறானது என்பதை புலிகள் உணர்ந்ததால் 2000களில் தமிழ் அரசு கட்சிக்கு பொதுமன்னிப்பளித்தனர். ஆனால், 90களின் நடுப்பகுதிகளிலேயே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் அமைப்புக்களுடன் புலிகள் தொடர்பேற்படுத்தி விட்டனர். ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புக்களின் வவுனியா முகாம்களிற்குள்தான் விடுதலைப் புலிகளின் உள்நடவடிக்கை அணிகள் தங்கியிருந்தன. இவையெல்லாம் போராளிகளிற்கு மட்டுமே தெரிந்த தகவல்கள்.

இப்போது, ஒட்டுக்குழு, துரோகியென புறப்பட்ட பேஸ்புக் போராளிகளிற்கு தெரிந்திருக்காது. இவர்கள் யாருமே இந்த விடுதலை போராட்டத்தில் பங்களித்தவர்கள் கிடையாது. இவர்களின் சமவயதினர் போராட சென்ற போது, படித்து,  அரச உத்தியோகம் பெற்று, பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து, இப்போது பேஸ்புக்கில் தியாகி, துரோகி பட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவகையில் பார்த்தால், தமிழ் சமூகத்தின் ஒட்டுக்குழுக்கள் இவர்களாகவல்லவா அமைவார்கள்?

நீண்ட போராட்ட அமைப்பான புலிகளும், மற்ற இயக்கங்களும் தமது பழைய தவறுகளை மறந்து, மன்னித்து இணைந்து செயற்பட்டனர். இறுதியாக தமிழ் அரசு கட்சிக்கும் பொதுமன்னிப்பளித்து கூட்டமைப்பில் இணைத்தனர்.

இப்போது, சில அவசரகுடுக்கைகள் ஆயுதகுழுக்கள், ஒட்டுக்குழுக்கள், தர்மலிங்கம் கொலை, அமிர்தலிங்கம் கொலையென பேச ஆரம்பித்துள்ளது சிங்கள தரப்பொன்றின் நிகழ்ச்சி நிரலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரணில் பதவியேற்ற பின்னர் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் சிலரின் தலையீட்டுடன் கூட்டமைப்பு உடைக்கப்பட்டது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்ற வலுவான சந்தேகம் அரசியல் அரங்கில் உள்ளது.

இப்போது, தர்மலிங்கம் கொலை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்துவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைகளை முன்னிலைப்படுத்தி, புலி நீக்கம் செய்யும் தமிழ் அரசு கட்சியின் மற்றொரு இரகசிய நகர்வா என்ற கேள்வியும் மக்களிடம் எழும். தமது தலைவர்கள் தர்மலிங்கத்தை கொன்றது யார், அமிர்தலிங்கத்தை கொன்றது யார் என கேள்வியெழுப்பி, அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கோசத்தை முன்னிலைப்படுத்துவார்கள். அப்போது நெருக்கடியை சந்திக்கப் போவது ரெலோவோ, புளொட்டோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்போ அல்ல. விடுதலைப் புலிகளே சிக்கலில் சிக்குவார்கள். ஏனெனில், தமிழ் அரசு கட்சியின் அனேக தலைவர்களை விடுதலைப் புலிகளே கொன்றார்கள்.

சிறைகளில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிக்க வேண்டுமென அனைத்து தமிழ் மக்களும் கோரும் போது, தமிழ் அரசு கட்சி சிறை நிரப்பும் இரகசிய நகர்வை, தென்னிலங்கை சக்தியொன்றின் பின்னணியில் நடத்துகிறதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுவது நியாயமானது.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலின் பின்னர், வலி தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் வேட்பாளராக தர்சனை தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமித்தது. எனினும், தி.பிரகாஷ் பதவியாசையில் கூட்மைப்பின் முடிவையும் மீறி ஆட்சியை கைப்பற்ற சதி நடவடிக்கையில் இறங்கியிருந்தார். எனினும், அதில் மூக்குடைபட்டார். அதன்பின் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளராக மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்த சதி நடவடிக்கை தோல்வியடைந்த பின்னணியிலேயே நேற்றை அவசரக்குடுக்கைதனம் நடந்துள்ளது.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர், இதே பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்சி உறுப்பினர் ஒருவர், தேர்தல் களைப்பு நீங்குவதற்காக, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சிங்கள பாலியல் தொழிலாளியொருவரை மருதனார்மட விடுதிக்கு அழைத்து வந்திருந்தார். அந்த பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருந்து விட்டு, அவருக்கான கட்டணத்தை முழுமையாக கொடுக்கவில்லை. அந்த பாலியல் தொழிலாளியும் அந்த அரசியலட கட்சிக்காரருடன் நெருக்கமாக இருந்து மதுவும் குடித்து, நல்ல வெறியில் இருந்தார். அவருக்கு 2000 ரூபா கட்டணம் பேசப்பட்டிருந்தது. 1500 ரூபா கொடுத்து, 500 ரூபா கடன் சொன்னார்கள். அந்த பெண் ரகளையில் ஈடுபட்டதையடுத்து, நமது அரசியல்வாதி அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் பொலிசார் அங்கு வந்து, பெண்ணை அழைத்து சென்று, அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது, நமது அரசியல்வாதியின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார்.

அந்த சம்பவம் நடந்த விடுதி, தற்போது தர்மலிங்கத்தின் சிலை திறக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீற்றர்கள் தொலைவில்தான் உள்ளது. அதாவது, இப்பொழுது பொங்கியெழுந்துள்ள நமது வாலிபர்கள், முதலில் கவனம் செலுத்த வேண்டியது இவ்வாறான ஒழுக்கக்கேடான சம்பவங்களை இந்த பிரதேசத்திலிருந்து தடுப்பதை. தமிழ் மக்களை மேலும் ஆபத்தில் தள்ளும் அரசியல் குழப்பங்களில் இவர்கள் ஈடுபடாமல், சமூகவிரோத செயல்களை களையும் நடவடிக்கைகளில் இவர்கள் இறங்குவது அவசியமானது. இந்த பகுதியில் இவ்வாறான கலாச்சார பிறழ்வுகளில் அரசியல் பிரமுகர் ஒருவரே ஈடுபடும் நிலையுள்ளது.

சமூக விழுமியங்களிற்கு ஒவ்வாத இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு, அவர்களை பொதுக்களத்திலிருந்து அகற்றுவதும் இந்த திடீர் ஞான அரசியல்வாதிகளிற்கு முன்னுள்ள கடமை. செய்வார்களா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0

இதையும் படியுங்கள்

வேட்பாளர்களை தேடிப்பிடித்த கட்சி: யாழ் மாநகரசபையில் நடந்த சுவாரஸ்யம்!

Pagetamil

மாவையின் வீடு தேடிச் சென்று ஆசனத்தை உறுதி செய்தார் வித்தியாதரன்!

Pagetamil

‘விக்கி, மணி அணிக்கு எனது ஆதரவில்லை’: நேரில் சொன்னார் க.அருந்தவபாலன்!

Pagetamil

விக்னேஸ்வரனுடன் கூட்டணி: எதையும் தாங்கும் மனம் படைத்தவர்களிற்கு மட்டுமே பொருத்தமா?

Pagetamil

இனியும் நீ கட்சியில் இருக்கப் போகிறாயா என கனகஈஸ்வரன் கேட்டார்: சுமந்திரன் தகவல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!