3 வாகனங்கள் மோதி விபத்து: ஆளில்லாமல் 75 மீற்றர் ஓடிய மோட்டார் சைக்கிள் (VIDEO)

Date:

மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

பளை, முல்லையடி பகுதியில் நேற்று இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வயோதிப தம்பதியினர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பிக்கப் ரக வாகனம் வலப்பக்கமாக முந்திச் செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.

இதன் போது கண்டாவளையை சேர்ந்த 67 வயதான கந்தர் வித்தியானந்தம் மற்று அவரது மனைவி ஆகியோரே படுகாயமடைந்தவராவார்கள்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபத் தம்பதியினர் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி இல்லாமல் சுமார் 75மீற்றர் வரை முன்னோக்கி பாய்ந்து பயணித்ததுள்ளது. இவ் வேளை கிளிநொச்சி பகுயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் எதிர்த் திசையில் பயணித்த கப் ரக வாகத்துடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் பாரியளவில் சேதங்களுக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபத் தம்பதியின் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயங்களுடன் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்