யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரமில்லாதால் மீளவும் ஒத்தி வைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையின் புதிய மேயர் தேர்வுக்காக உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் சபை இன்று கூடி இருந்தது.
இதன்போது சபையில் உறுப்பினர்களின் கோரமிருப்பதாக தெரிவித்து முதல்வர் தெரிவில் பெயர்களை பிரேரிக்குமாறு ஆணையாளர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் சார்பில் இமானுவேல் ஆனால்ட்டின் பெயர் தமிழ் அரசு கட்சியினால் பிரயோகிக்கப்பட்ட நிலையில் சபையில் இருந்து ஈபி டி பி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் சபையில் கோரமில்லை என எனவும் முதல்வர் தெரிவை ஒத்தி வைப்பதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.இதனால் அடுத்து வரும் 14 நாட்களுக்குள் மீளவும் முதல்வர் தேர்வு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.