கோயிலுக்குள் செல்ல அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு

Date:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவைராணி குளம்மகாதேவர் கோயில் உள்ளது. சிவ – பார்வதி கோயிலான இங்கு, நடிகை அமலா பால், சாமிதரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் திங்கட்கிழமை சென்றார். கோயில் நிர்வாகிகள், இங்கு இந்துக்கள் மட்டுமே செல்லவேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று கூறினர். பின்னர் கோயிலுக்கு வெளியில் நின்று தரிசனம் செய்தார் அமலாபால்.

இதுபற்றி கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் , “கோயிலுக்கு சாமிதரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். அனுமதி மறுக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டிலும் மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமுமாக இருக்கிறது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் காலம் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகி பிரசூன் குமார், “பிறமதத்தை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.அது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரபலங்களைஅனுமதித்தால் அது எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. பின் நடைமுறையை மீறியதாக சர்ச்சையாகி விடும். அதனால்தான் அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...

வேலூர் கோட்டை திப்பு மஹாலில் இருந்து விடுதலைப்புலிகளின் போராளிகள் தப்பியது எப்படி?

தமிழ்​நாட்​டில் உள்ள சிறைகளில் இருந்து கைதி​கள் அவ்​வப்​போது தப்பி ஓடும் சம்​பவங்​கள்...

மெக்சிகோவின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது – நாடு முழுவதும் வன்முறை; 11 பேர் பலி!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்