கூட்டுறவு சங்க தேர்தலில் மூக்குடைபட்ட இராஜாங்க அமைச்சர்

Date:

ஆராச்சிக்கட்டு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த படுதோல்வி அடைந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவு சங்க தேர்தல் வாக்களிப்பு நேற்று முன்தினம் (17) இடம்பெற்றது. இதில் 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு அரச அமைச்சருக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் 6 பேர் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்.

இராஜாங்க அமைச்சர் படுதோல்வி அடைந்ததால், அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு முன்பாக கூச்சலிட்டு, முழக்கமிட்டனர்.

மற்றொரு குழுவினர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர்.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சனத் நிஷாந்த மௌனமாக இருந்த போதிலும், அவரது சகோதரர் ஜகத் சமந்த ஆவேசமாக போராட்டக்காரர்களை திட்டியதை காணமுடிந்தது.

எனினும், ஜகத் சமந்தாவும் அதே தேர்தலில் போட்டியிட்டு ஐந்தாவது இடத்தைப் பெற்று உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்