27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

தென்னிலங்கை வாசி பொதுமுகாமையாளரா?: வடக்கு இ.போ.சவினர் போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக சிங்கள நபர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தில் 5 சாலைகள் சேவைகளை மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த டிசம்பர் இறுதியில் ஓய்வு பெற்றார். அவரது வெற்றிம் இதுவரை நிரப்பப்பாத நிலையில், தற்போது தென்னிலங்கை சிங்கள நபர் ஒருவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை பதவியேற்கவிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு, காரைநகர், மன்னார் சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா, கிளிநொச்சி சாலைகள் வழக்கம் போல இயங்குகின்றன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு சாலை தவிர்ந்த ஏனைய 3 சாலைகளில் பாடசாலை போக்குவரத்து இடம்பெற்றது. தூர இடங்களிலிருந்து வந்த பேருந்துகள் நேர அட்டவணைப்படி புறப்படுகின்றன. ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை.

யாழ் சாலையின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

யாழ். மத்திய பேரூந்து நிலையத்திலும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துணைவேந்தர் இல்லாத 4வது பல்கலைக்கழகமாகியது கிழக்கு பல்கலைக்கழகம்!

Pagetamil

முகநூல் மோசடி – சந்தேக நபர் கைது

east tamil

பாதுகாப்பு முறையில் புரட்சி – சிறைகளுக்கு விசேட அணிகள்

east tamil

பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

east tamil

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

Leave a Comment