27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மூன்று அரசியல் கட்சிகள் இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

அவர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளும் இன்று புதன்கிழமை காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முசலி பிரதேச சபைக்கு இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம் இதுதான்: ஜேவிபியின் கண்டுபிடிப்பு!

Pagetamil

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் – விஜித ஹேரத்

east tamil

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

Leave a Comment