இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் பின்னர், ஷானக 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தனக்கு தெரியவில்லை என இந்திய கப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியின் கடைசி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவருக்கு முன்னதாக இலங்கை அணியின் கப்டன் 95 ரன்கள் எடுத்திருந்தார். ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 2, 0 மற்றும் 1 ரன்களை அவர் எடுத்திருந்தார். நான்காவது பந்தின் போது நொன்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த அவரை ஷமி அவுட் செய்திருந்தார். அந்த அப்பீல் மூன்றாவது நடுவரின் பார்வைக்கு சென்றிருந்தது. இருந்தாலும் ரோகித் உடனான உரையாடலுக்கு பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். பின்னர் ஷானக சதம் விளாசினார்.
Captain @ImRo45 explains why he withdrew the run-out appeal at non striker’s end involving Dasun Shanaka.#INDvSL @mastercardindia pic.twitter.com/ALMUUhYPE1
— BCCI (@BCCI) January 10, 2023
“ஷமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஷானக 98 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார். அவர் ஆடிய விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. நாங்கள் அவரை அப்படி அவுட் செய்ய விரும்பவில்லை. அதை செய்திருக்கவும் கூடாது. அவருக்கு எனது வாழ்த்துகள். மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தார்” என போட்டி முடிந்ததும் ரோகித் சொல்லி இருந்தார்.
Nice gesture ❤ by Rohit Sharma 👌 At that time Dasun Shanaka was on 98!#INDvsSL #INDvSL pic.twitter.com/rO2BroCa6f
— CricketFans (@_fans_cricket) January 10, 2023
கிரிக்கெட் விதிப்படி நொன்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள துடுப்பாட்ட வீரரை, பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்னர் ரன் அவுட் செய்யலாம்.
ஆனால், அது கிரிக்கெட் உணர்விற்கு எதிரானது. பாரம்பரியம்மிக்க அணிகளின் வீரர்கள் அதை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.