2023 ஹஜ் பருவத்தின் போது COVID-19 கட்டுப்பாடுகளை நீக்குவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதன்மூலம், தொற்றுநோய்க்கு முந்தைய காலப்பகுதியை போலவே யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சவூதி அரேவியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், தொற்றுநோய் தாக்குதலுக்கு முந்தைய ஆண்டு, சுமார் 2.6 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் செய்தனர். 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் வெளிநாட்டு யாத்ரீகர்களை அனுமதிப்பதற்கு முன், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே இராச்சியம் அனுமதித்தது.
ஹஜ் அமைச்சு ஒரு ட்வீட்டில், மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களின் தாயகமான இராச்சியம், இந்த பருவத்திற்கு வயது வரம்புகள் உட்பட எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காது என்று தெரிவித்துள்ளது.
18 முதல் 65 வயதுக்குட்பட்ட யாத்ரீகர்களில் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது நோய்த்தடுப்பு மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படவில்லையென்பதை உறுதி செய்தவர்களே 2022 இல் ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி ஹஜ் சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹஜ் உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும்.
ஹஜ் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்நாளில் ஒருமுறை செய்ய வேண்டிய கடமையாகும்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் ஆண்டுதோறும் 30 மில்லியன் யாத்ரீகர்களுக்கு உம்ரா மற்றும் ஹஜ் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 19 மில்லியன் மக்கள் உம்ராவில் பங்கேற்பார்கள், இது மக்காவிற்கு புனித யாத்திரையின் மற்றொரு வடிவமாகும், இது – ஹஜ் போலல்லாமல் – தொற்றுநோய்க்கு முன், ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என காணப்பட்டது.