எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட4 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சை குழுக்களும் நேற்று வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கட்டுப்பணத்தை நேற்று செலுத்தியதுடன், தேசிய மக்கள் சக்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியும் முறையே கல்முனை மற்றும் கொழும்பு மாநகர சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தின.
கொழும்பு, கம்பஹா, காலி, பதுளை, அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஜனவரி 20ஆம் திகதி நண்பகல் வரை செலுத்தலாம்.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
எனினும், உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை